திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சன் டீவியின் சறுக்கல்

சன் டீவியின் சறுக்கல்

அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி வந்த நேரத்தில்  ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகி வந்தது. என்ன காரணத்தினாலோ திடீரென இத்தொடர் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஏதாவது இட்டு நிரப்ப வேண்டுமே என்று காமெடி ஜங்ஷன் என்ற பெயரில் ஒரு காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். வழக்கமாக சன் சிங்கருக்கு செய்தது போல எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.  



இந்த நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு மூன்று நாட்களிலேயே காமெடி செய்யும் திறமை உள்ளவர்கள் எங்களுக்கு வீடியோவுடன் எழுதி அனுப்புங்கள் உங்கள் திறமைகளை நாங்கள் உலகிற்கு அறிமுகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்யத்துவங்கி விட்டார்கள். அப்படியென்றால் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்ப எங்களிடம் சரக்கு இல்லை என்று அவர்களே ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.


தமிழில் தயாரிக்கப்படாத மொழிமாற்று தொடர்களை ஒளிபரப்பத் துவங்கியது, இதுவரை இல்லாத மறு ஒளிபரப்பை ஆரம்பித்தது, திட்டமிடப்படாத ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கியது என நடப்பவை எல்லாம் சன் டீவியின் சறுக்கல்களை படம்பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. இப்பொழுதாவது சன் டீவி தன் நிலைமையை உணர்ந்து கொண்டு இது போன்ற அவசரகால செயல்களில் இறங்காமல் முன்போல திட்டமிட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் காரியங்களில் இறங்கும் என்று எதிர்பார்க்கலாமா ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.