திங்கள், 26 மார்ச், 2012

தொலைக்காட்சி தொடர்களில் மூன்று குழந்தைகள் சென்டிமென்டா?

முந்தானை முடிச்சு தொடரில் கந்தசாமிக்கு மூன்று மகன்கள். உதிரிப்பூக்கள் தொடரில் சிவனேசனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். “நாதஸ்வரம்” தொடரில் மகாவுக்கு ஒருதங்கை ஒரு தம்பி என மூன்று பேர்.. அடுத்து வரும் திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா சகோதரி்கள் மூன்று பேர்

தங்கம் தொடரில் கங்கா சகோதரிகள் மூன்று பேர். தென்றல் தொடரில் கதாநாயகியுடன் சித்தி மகன், மகளுடன் சேர்த்து மூன்று பேர் ‘செல்லமே’ தொடரில் கதாநாயகன் வடமலைக்கு இரண்டு சகோதரிகள் என்பதால் அவர்கள் மூன்றுபேர். சமீபத்தில் துவங்கிய ஆண்பாவம் தொடரிலும் கூட மாதவனின் அத்தைக்கும் மூன்று மகள்கள். அழகி தொடரிலும் கதாநாயகிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று பேர்.

எல்லா சீரியல்களிலும்மூன்று குழந்தைகள் என்பது சென்டிமென்டா அல்லது நிறைய பேர் இருந்தால் கதையை வளர்க்க வசதியாக இருக்குமென்பதற்காக வா ??

சனி, 17 மார்ச், 2012

உடல் வலியைப்போக்க குடிப்பதுதான் ஒரே வழியா?

‘திருமதி செல்வம்’ தொடரில் ஒரு நல்லவனை குடிக்க வைத்து அவனுக்கு கெட்ட பெயர் வரவைத்து விட்டார்கள் தொடரின் தயாரிப்பாளர்கள். அவனது மனைவி தற்கொலை செய்து கொள்ள முயல அதனால் மனம் மாறிய செல்வம் இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறானாம்.

அவன் குண்டர்களால் தாக்கப்பட்டு கைஎழும்பு முறிந்து போகிறது. அந்த வலி தெரியாமல் இருக்க நாட்டு வைத்தியர் சிறிது குடிக்க வைக்கிறாராம். அதனால் வலி வரும் போதெல்லாம் குடிக்கிறானாம். அப்படி குடிக்கும் போது மனைவிக்குத் தெரியக் கூடாது என்று நந்தினி வீட்டில் தங்குவானாம் கதையை நகர்த்துவதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிப்பதா?

வலி வருகிற ஒவ்வொருவரும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? வலியைப் போக்க குடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா? கையில் வலி இருந்தால் பணக்கார செல்வம் ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க மாட்டாரா?!! குடித்துவிட்டு தனக்கு பல விதத்திலும் உதவி செய்த நந்தினிக்கு கஷ்டம் வருவதுபோல ஒரு செயலை ஆரம்பத்திலிருந்து நல்லவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் செய்வானா?

‘தொடர்களை எப்படித்தான் பார்க்கிறீர்களோ?’ என்று பலர் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட தொடர்களில் இதையெல்லாம் யோசிப்பது தவறுதானோ!!