திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதா?

“திருமதி செல்வம்” தொலைக் காட்சித் தொடரில் வரும் கதாநாயகன் செல்வம் மிகவும் நல்லவன், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவன், எந்தச்சூழ்நிலையிலும் சரியாகவே பேசுவான் சரியானதையே செய்வான் என அவனது பாத்திரத்தை படைத்து ஆரம்பத்திலிருந்தே அவனது செயல்களை நல்லவிதமாகவே காண்பித்து வந்தார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட செல்வம் தன் தொழில் ரீதியாக மது அருந்த கட்டாயப்படுத்தப்படுகிறான் அதனால் குடிபோதையில் சுய நினைவில்லாமல் வீட்டுக்குவருகிறான் என்று கண்பித்தார்கள். அடுத்ததாக அவனது புது நண்பரான சேட் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்து அதனால் அவன் வீட்டுக்கு வெளியே குடிபோதையில் புல்தரையில் விழுந்து கிடந்ததாகக் காட்டினார்கள்.

இப்போதோ அவனது தங்கை ராணி கணவனின் நிபந்தனையை ஏற்று செல்வத்தை வேண்டாமென சொல்லிவிட்டு கணவனுடன் வாழப் போகிறேன் என்று சொல்லவே மனம் வருந்தி தன் சோகத்தை மறப்பதற்காகக் குடிக்கிறான் என்று சொல்கிறார்கள். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியே புல் தரையில் விழுந்து கிடப்பதாககக் கதை போகிறது.

நல்ல குணாதிசையம் உள்ளவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் முதல் முறை குடிப்பதைத் தவிர்க்க முடியாதவனாக இருந்திருக்கலாம். இரண்டாவது முறை கூல்ட்ரிங்கில் கலந்து கொடுத்த போது அந்த நல்லவன் ஒரு கிளாஸோடு நிறுத்தியிருக்கலாமே.

எப்போதும் நல்லதையே செய்யும் செல்வம் தங்கை தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாளே என்று வருந்துபவன், குடிக்கத்தான் போக வேண்டுமா? அதுவும் தானே தேடிப்போய் குடிப்பதாகக் காட்டுவதும் கூட ஓவர்தானே! சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா? விகடன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா?!

2 கருத்துகள்:

  1. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள ஆலோசனையை தாங்களாகவே முன்வந்து தந்துள்ளமைக்கு என் நன்றிகள்

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.