திங்கள், 31 டிசம்பர், 2012

செவ்வாய், 25 டிசம்பர், 2012

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதா?


சாலமன் பாப்பையா சன் தொலைக்காட்சியில் தினம் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லியது ஓர் அரிய பணி என்பதை மறுக்க முடியாது. 

இப்போது சன் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் காலையில் திருக்குறள் கதைகள் ஒளிபரப்புகிறார்கள்.  ஆகா நல்ல விஷயமாச்சே என்று தொடர்ந்து பார்த்தால் அப்போதுதான் தெரிந்தது ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள் என்று. ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..' திருக்குறளுக்குய உதாரணமாக கல்கத்தாவில் பிரபலமாயிருந்த தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் வாழ்க்கை பற்றிய விவரங்களைக் கூறினார் சாலமன் பாப்பையா. இதையே மூன்று வாரங்களாகவா ஒளிபரப்புவது!

மற்ற சேனல்கள்தான் இது போல ஒளிபரப்பியதையே ஒளிபரப்புகிறார்கள் என்று பார்த்தால் சன் டீவியுமா? அப்படி திரும்ப ஒளிபரப்பினால் ‘மறு ஒளிபரப்பு என்றாவது அறிவிக்கட்டும்.. இனியாவது தொலைக்காட்சி பார்ப்பவர்களை இப்படி மறுஒளிபரப்புச் செய்து ஏமாற்றாமல் இருப்பார்களா?

வியாழன், 8 நவம்பர், 2012

தொலைக்காட்சித் தொடர் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிக்கிறார்களே!


பிள்ளைநிலா தொடரில் தன் தங்கையை தகுதியில்லாத ஒருவன் காதலிப்பதா? என்று அவனை அடித்து கோவில் படிகளில் கீழே தள்ள அவன் இறந்து போகிறான். அவன் செல்வாக்கு மிக்கவன் என்ற காரணத்தினால் யாருமே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுக்கிறார்கள் அதனால் அக்கொலைகாரன் தண்டனை பெறாமல் நடமாடுகிறான்.

முந்தானை முடிச்சு தொடரில் பிரேமா மருத்துவ மனையில் இருக்கும் கிருஷ்ணவேணியை கொன்றுவிடுகிறாள். சதா தன் அக்காவின் கணவனை விஷம் குடிக்கச்செய்து சாகடித்துவிடுகிறான்.  ஆனால் அவர்களை யாரும் சந்தேகப்படவும் இல்லை போலிஸும் கண்டுபிடிக்கவும் இல்லையாம்.

உதிரிப்பூக்கள் தொடரில் சிவநேசன் செய்யாத கொலையை அவன்தான் செய்ததாக தெட்சிணாமூர்த்தி காவல்துறையிடம் சொல்லி அவர்கள் சிவநேசனை தேடுவதாகவும் அதனால் சிவநேசன் தெட்சிணாமூர்த்தியின் 3 குழந்தைகளையும் கடத்திச் சென்றுவிடுவதாகவும் கதை. பல வருடங்கள் ஆகியும்  அக்கொலையின் உண்மையான குற்றவாளி யார் என்று காவல்துறை கண்டுபிடிக்கவில்லையாம்.    .

திருமதி செல்வம் கதையில் காவ்யாவின் கணவன் செர்ரி காவ்யாவின் தங்கை பிரியாரையும் அவனது அலுவலக மேனேஜரையும் கொலை செய்துவிடுகிறான். ஆனால் காவல்துறையினர் அவனைப் பிடிக்கவில்லை. காவ்யாவே தன் கணவனைக் கொலைகாரன் என்று காவல்துறையினரிடம் நிரூபித்து அவனுக்கு தண்டனை வாங்கித் தருகிறாளாம்.

தங்கம் தொடரில் கங்காவின் தாய் சுப்புலட்சுமி தன் மகளுக்குத் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த மாப்பிள்ளையை (அவன் தன் மகளைக் கெடுத்து விட்டான் என்ற காரணத்திற்காக) சூலாயுதத்தால் குத்திவிடுகிறாளாம், சுப்புலட்சுமியும் ஜெயிலில்தான் இருக்கிறாளாம். ஆனாலும் அவள்தான் குற்றவாளி என்று காவல்துறையினருக்குத் தெரியாதாம்.

செல்லமே தொடரில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் கடற்கரையை ஸ்நேகா கொன்றுவிடுகிறாள். ஆனால் யாருக்குமே அவள்மீது சந்தேகம் வராததால் கொலைக் குற்றத்திலிருந்து தப்பிவிடுகிறாள். கடற்கரை வீட்டில் அவரது மனைவி முத்தரசியுடனேயே இருக்கிறாள் என்று காண்பிப்பதுதான் வேடிக்கை. வடமலை தன்னைத் தாக்கவந்தவனை கீழே தள்ளிவிட அவன் வைத்திருந்த கல்லே அவன் தலையில் விழுந்து இறந்துவிடுகிறான். போலிஸ் அதிகாரியான சிவரஞ்சனி வடமலைதான் அவனைக்கொன்றதாக்க் கூறுகிறாள். ஆனால் வடமலைமீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகிறாளாம்.

நாதஸ்வரம் தொடரில் பாண்டியை அவனது முதலாளியே கொன்று பாண்டி தற்கொலை செய்து கொண்டதாக ஊரை எமாற்றிவிடுகிறானாம். அவன்தான் பாண்டியைக் கொன்றவன் என்று தெரியவரும்போது அவனே விபத்தில் இறந்துவிடுகிறான் என்று முடிந்துவிடுகிறது.

ஒரு சில வழக்குகள் தவிர பெரும்பாலான கொலை வழக்குகளில் குற்றவாளிகளை வெகு திறமையாக நம் காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவதாகவே செய்திகள் சொல்கின்றன. ஆனால் இந்த தொலைக்காட்சித் தொடர்களில் எந்த கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிப்பது எப்படி? 

திங்கள், 1 அக்டோபர், 2012

தொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காகவா ?


முந்தானை முடிச்சு தொடரில் மீனாவை வீட்டில் வேலைக்காரிபோல இருக்கச்சொல்லிவிட்டு அவளது கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யப்போகிறார்களாம்.

உதிரிப்பூக்கள் தொடரில் தெட்சிணாமூர்த்தி இரண்டு மனைவிகளுடன் வாழ்வதாகவும் இது தெரிந்தவுடன் முதல் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து வாழவதாகவும் காண்பிக்கிறார்கள்.

திருமதி செல்வம் கதையில் செல்வம் அர்ச்சனாவுடன் வாழ விடமாட்டேன் அவனைப்பிரித்து கல்யாணம் செய்து காட்டுகிறேன் என்று நந்தினி சபதம் செய்து அதற்கான வேலைகளை செய்து வருகிறாளாம்.

தங்கம் தொடரில் ஐயா இரண்டு மனைவிகளுடனும், அவர்களுடைய குழந்தைகளுடனும் வாழ்வதே முக்கிய கதை.

தென்றல் நெடுந்தொடரில் டாக்டரையா முதல் மனைவியை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியுடன் வாழ்வதும் அவளைப்பிரிந்து முதல் மனைவியுடன் வாழ்வதுமாகக் கதை செல்கிறது.

செல்லமே தொடரிலும் வடமலை செல்லம்மாவை விட்டுவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்து கொள்வதும் ஆனால் செல்லம்மாவின் குழந்தைகள் மட்டும் வேண்டும் என்று அதற்காகப் போராடுவதுமாகக் கதை

அழகியில் சோமு மனைவி மதியிருக்க அவளை விட்டுவிட்டு இன்னொருத்திக்கு வலைவீசுவதுமாக கதையை அமைத்திருக்கிறார்கள்.

நாதஸ்வரம் தொடரில் மகேஷின் கணவன் செல்வரங்கம் அவனது முதலாளியம்மாவுடன் பழகுவதாகவும் அவனது அக்காவே அவர்களைச் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் முதலில் சென்ற கதையில் ஒருவழியாக அவன் இப்போது மகேஷுடனேயே சேர்ந்து வாழ்வதாக கதையை மாற்றிவிட்டார்கள். இதற்காக டைரக்டரைப் பாராட்டலாம்,

இந்த போக்கிலிருந்து மாறுபட்டிருப்பது இப்போதைக்கு பிள்ளைநிலாவும், கார்த்திகைப் பெண்களும்தான்.

இப்படி கிட்டதட்ட எல்லா கதைகளிலுமே இரண்டு பெண்டாட்டிகள் என்று கதை, திரைக்கதையை அமைப்பதைப் பார்த்தால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே! தொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா?  

புதன், 23 மே, 2012

கதை நம்பும்படி இருக்க வேண்டாமா?


முந்தானை முடிச்சு தொடரில் மீனாவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக ப்ரேமா ஒரு சி டி யைத்தேடிப் பிடித்து வாங்கிவர அது காணாமல் போய் ஒருவழியாக அது வீட்டுக்கு வந்து மீனாவின் கையில் கிடைத்துவிடுகிறது. ப்ரேமா சாமர்த்தியமாகப் பேசி மீனாவிடமிருந்து அதை வாங்கி மீனாவின் கண்முன்னாலேயே எரித்துவிடுகிறாளாம். மீனாவின் வருங்காலக் கணவன் “அந்த சிடியை ப்ரேமா எரிக்கவில்லை” என்று சொல்லி ப்ரேமாவின் பீரோவிலிருந்து அதை எடுத்துக் காண்பிக்கிறான். 
இந்த விசயத்தை கந்தசாமியிடம் சொல்ல அவர் ப்ரேமாவை தனியாக அழைத்து “ஏன் இப்படி செய்கிறாய்?” என்று கேட்க “அந்த சிடி கிடைத்துவிட்டது என்று தானே என்னை விரட்டுகிறீர்கள். அந்த கிடியின் நாலு காபி என்னிடம் இருக்கிறது”  என்று சொல்கிறாள். (அந்த நேரத்துக்குள் அவள் எங்கும் வெளியில் போகாமலே சிடி காபி எப்படி வந்தது??)

மீனாவின் கல்யாணத்தை நிறுத்தாமலிருக்க (சிடியைத்தர) கந்தசாமியின்   சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எழுதித் தரவேண்டுமென்று ப்ரேமா வற்புறுத்துகிறாளாம். ( ஒருவரால் சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எப்படி எழுதித் தர முடியும்?) அந்த நல்லவர் கந்தசாமி அப்படியே எழுதித்தருகிறாராம்!! பத்திரப் பதிவு அலுவலகத்திற்கே சென்று பதிவு செய்து தருகிறாராம் அதுவும் எப்படிப் பட்ட நேரத்தில் கல்யாணத்திற்காக எல்லோரும் மண்டபத்திற்கு செல்ல இருக்கும் நேரத்திற்குள். (ஏதாவது நம்பும் படியாக இருக்கிறதா?)

எல்லோரும் கல்யாண மண்டபத்திற்கு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் மீனாவின் வருங்கால மாமியார் அவர்களுடைய சொந்தக் காரர்கள் மீனாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் என்று சொல்லி அவர்களை மீனாவின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வர அங்கு “சொத்துக்கள் முழுவதையும் கூட எழுதித் தருகிறோம்” என்று முத்து சொல்லும் சூழ் நிலை வருகிறதாம்.
 
மீனாவின் நலுங்கு நடந்த பிறகு கல்யாணம் நடப்பதற்கு முன் கந்தசாமியின் நண்பர் (இறந்துபோன) அண்ணாமலைக்கு கந்தசாமியின் மகன்களும் மருமகள்களும்  குளக்கரையில் காரியம் செய்கிறார்களாம். தொடர் பார்ப்பவர்களின் அனுதாபத்தைப் பெற / ஆர்வத்தைத் தூண்ட எப்படி வேண்டு மானாலும் திரைக்கதையை அமைக்கலாமா? நம்பும்படி இருக்க வேண்டாமா?? எல்லாமே நல்ல வேடிக்கைதான்

செவ்வாய், 22 மே, 2012

தொடர் தயாரிப்பாளர்கள். மக்களுக்குச் சொல்வதுதான் என்ன??


முந்தானை முடிச்சு தொடரில் மீனா ஒருவனை காதலித்து கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிடுகிறாள். திருமதி செல்வம் தொடரில் கதாநாயகி அர்ச்சனாவின் தங்கை ப்ரியா கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கதையை அமைத்திருந்தார்கள்.

‘’செல்லமே’ தொடரில் ஒரு பெண்ணை நான்கு பேர் கெடுத்துவிட அவள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானதாகவும் அவர்களுள் கர்ப்பத்திற்குக் காரணமானவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.என்றும் கதை தொடர்ந்தது.

உதிரிப்பூக்கள் தொடரில் திருமணமான தெட்சிணாமூர்த்தி இன்னொருத்தி யுடன் கல்யாணம் செய்து கொள்ளாமலே குழந்தையும் பெற்று குடும்பம் நடத்துவதாகக் கதையை அமைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் போதாதென்று சமீபத்தில் துவங்கிய ‘பிள்ளை நிலா’’ தொடரிலும் கோகிலா காதலித்து கல்யாணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி இருப்பதாகக் கதையைத் துவக்கியிருக்கிறார்கள்.

ஆக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாதி தொடர்களில் இப்படி கல்யாணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாகிவிடுவதாகக் கதையை அமைத்திருக்கிறார்களே தொடர் தயாரிப்பாளர்கள். இவர்கள் மக்களுக்குச் சொல்வதுதான் என்ன??    

திங்கள், 26 மார்ச், 2012

தொலைக்காட்சி தொடர்களில் மூன்று குழந்தைகள் சென்டிமென்டா?

முந்தானை முடிச்சு தொடரில் கந்தசாமிக்கு மூன்று மகன்கள். உதிரிப்பூக்கள் தொடரில் சிவனேசனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். “நாதஸ்வரம்” தொடரில் மகாவுக்கு ஒருதங்கை ஒரு தம்பி என மூன்று பேர்.. அடுத்து வரும் திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா சகோதரி்கள் மூன்று பேர்

தங்கம் தொடரில் கங்கா சகோதரிகள் மூன்று பேர். தென்றல் தொடரில் கதாநாயகியுடன் சித்தி மகன், மகளுடன் சேர்த்து மூன்று பேர் ‘செல்லமே’ தொடரில் கதாநாயகன் வடமலைக்கு இரண்டு சகோதரிகள் என்பதால் அவர்கள் மூன்றுபேர். சமீபத்தில் துவங்கிய ஆண்பாவம் தொடரிலும் கூட மாதவனின் அத்தைக்கும் மூன்று மகள்கள். அழகி தொடரிலும் கதாநாயகிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று பேர்.

எல்லா சீரியல்களிலும்மூன்று குழந்தைகள் என்பது சென்டிமென்டா அல்லது நிறைய பேர் இருந்தால் கதையை வளர்க்க வசதியாக இருக்குமென்பதற்காக வா ??

சனி, 17 மார்ச், 2012

உடல் வலியைப்போக்க குடிப்பதுதான் ஒரே வழியா?

‘திருமதி செல்வம்’ தொடரில் ஒரு நல்லவனை குடிக்க வைத்து அவனுக்கு கெட்ட பெயர் வரவைத்து விட்டார்கள் தொடரின் தயாரிப்பாளர்கள். அவனது மனைவி தற்கொலை செய்து கொள்ள முயல அதனால் மனம் மாறிய செல்வம் இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறானாம்.

அவன் குண்டர்களால் தாக்கப்பட்டு கைஎழும்பு முறிந்து போகிறது. அந்த வலி தெரியாமல் இருக்க நாட்டு வைத்தியர் சிறிது குடிக்க வைக்கிறாராம். அதனால் வலி வரும் போதெல்லாம் குடிக்கிறானாம். அப்படி குடிக்கும் போது மனைவிக்குத் தெரியக் கூடாது என்று நந்தினி வீட்டில் தங்குவானாம் கதையை நகர்த்துவதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிப்பதா?

வலி வருகிற ஒவ்வொருவரும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? வலியைப் போக்க குடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா? கையில் வலி இருந்தால் பணக்கார செல்வம் ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க மாட்டாரா?!! குடித்துவிட்டு தனக்கு பல விதத்திலும் உதவி செய்த நந்தினிக்கு கஷ்டம் வருவதுபோல ஒரு செயலை ஆரம்பத்திலிருந்து நல்லவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் செய்வானா?

‘தொடர்களை எப்படித்தான் பார்க்கிறீர்களோ?’ என்று பலர் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட தொடர்களில் இதையெல்லாம் யோசிப்பது தவறுதானோ!!

புதன், 15 பிப்ரவரி, 2012

நல்லவன் குடிக்கமாட்டான்; அப்படி குடிப்பவன் நல்லவனாக மாட்டான்

“திருமதி செல்வம்” தொடரில் செல்வம் கதாபாத்திரத்தை மிக நல்லவராக உருவாக்கிவிட்டு அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குடிக்க ஆரம்பித்து பின் மொடா குடியனாக ஆகிவிட்டதாகவும், குடிகாரர்கள் செய்யும் எல்லா அட்டகாசங்களையும் செல்வம் செய்வதாகவும் காட்டி வருகிறார்கள். இது ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இல்லை.

ஒரு நல்லவன் எத்தனை முறை எத்தனை பேரால் கட்டாயாப் படுத்தப் பட்டாலும்கூட அவன் குடிக்கமாட்டான். அப்படியே குடித்தால்கூட அடாவடித்தனமாக நடக்கமாட்டான் இது நிச்சயம். இப்படியெல்லாம் நடப்பவனை நல்லவன் என்று எப்படிச் சொல்லமுடியும்.

உங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டவேண்டும், எதிர்பாராத திருப்பங்கள் வர வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் இயற்கைக்கு மாறாகக் காட்டுவதா? நல்லவனே குடிப்பதாகக் காட்டுவதால் இன்னும் சிலபேர் குடிகாரர்களாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

பகல் நேரத்தில் ஒளிபரப்பான திருமதி செல்வம் அதன் கதை அமைப்பு நன்றாக இருந்ததால் இரவு நேர ஒளிபரப்பாக மாற்றப்பட்டது. செல்வத்தின் தம்பி, செல்வத்தின் அப்பா குடிகாரர்கள்தான்; அவர்கள் நல்லவர்களாகக் கட்டப்படவில்லை. செல்வம் நல்லவன், யாருக்கும் கெடுதல் செய்யாதவன், எல்லோருக்கும் நல்லதே செய்பவன், பல கஷ்டங்களுக்கிடையே முன்னேறி வருபவன் இப்படி மாறியதாகக் காட்டுவதை ஒத்துக் கொள்ளவே முடியாது.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதா?

“திருமதி செல்வம்” தொலைக் காட்சித் தொடரில் வரும் கதாநாயகன் செல்வம் மிகவும் நல்லவன், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவன், எந்தச்சூழ்நிலையிலும் சரியாகவே பேசுவான் சரியானதையே செய்வான் என அவனது பாத்திரத்தை படைத்து ஆரம்பத்திலிருந்தே அவனது செயல்களை நல்லவிதமாகவே காண்பித்து வந்தார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட செல்வம் தன் தொழில் ரீதியாக மது அருந்த கட்டாயப்படுத்தப்படுகிறான் அதனால் குடிபோதையில் சுய நினைவில்லாமல் வீட்டுக்குவருகிறான் என்று கண்பித்தார்கள். அடுத்ததாக அவனது புது நண்பரான சேட் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்து அதனால் அவன் வீட்டுக்கு வெளியே குடிபோதையில் புல்தரையில் விழுந்து கிடந்ததாகக் காட்டினார்கள்.

இப்போதோ அவனது தங்கை ராணி கணவனின் நிபந்தனையை ஏற்று செல்வத்தை வேண்டாமென சொல்லிவிட்டு கணவனுடன் வாழப் போகிறேன் என்று சொல்லவே மனம் வருந்தி தன் சோகத்தை மறப்பதற்காகக் குடிக்கிறான் என்று சொல்கிறார்கள். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியே புல் தரையில் விழுந்து கிடப்பதாககக் கதை போகிறது.

நல்ல குணாதிசையம் உள்ளவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் முதல் முறை குடிப்பதைத் தவிர்க்க முடியாதவனாக இருந்திருக்கலாம். இரண்டாவது முறை கூல்ட்ரிங்கில் கலந்து கொடுத்த போது அந்த நல்லவன் ஒரு கிளாஸோடு நிறுத்தியிருக்கலாமே.

எப்போதும் நல்லதையே செய்யும் செல்வம் தங்கை தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாளே என்று வருந்துபவன், குடிக்கத்தான் போக வேண்டுமா? அதுவும் தானே தேடிப்போய் குடிப்பதாகக் காட்டுவதும் கூட ஓவர்தானே! சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா? விகடன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா?!

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தொலைக்காட்சி தொடர்களுக்கு கதைப்பஞ்சமா?!





“திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள். “தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு தொடர்களுமே ஒரே தயாரிப்பாளர் தயாரிப்பதுதான்.

“இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்??” என்று என் முந்திய பதிவில் கேட்டிருந்தேன். இப்படி ஒரே தயாரிப்பாளர் தயாரிக்கும் இரு தொடர்களிலுமே ஒரே மாதிரி கதையை அமைப்பதன் காரணம் கதைப் பஞ்சம் என்று கொள்வதா??

சனி, 21 ஜனவரி, 2012

எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்?

“முந்தானை முடிச்சு’” தொடரில் கதாநாயகி தமிழரசியை அவரது தாய் வீட்டைவிட்டு துறத்திவிட்டார்கள். (இதே தொடரில் தமிழரசியின் தங்கையை அவளுடைய கணவனே துறத்திவிட்டு பின் வீட்டில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதையும் இங்கு டுறிப்பிடலாம்)

“நாதஸ்வரம்” தொடரில் மகேஸ் வீட்டில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பdudtdடுகிறாள். ‘திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள்.

“தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது. ‘’செல்லமே’’’ தொடரில் அமுதா தானாகவே வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் கொஞ்சம் நாட்கள் கழித்து வீடு திரும்புவதாகவும் காட்டினார்கள்.

இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்??

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

கதாநாயகனே இறந்ததாகச் சொன்னால் யார்தான் நம்புவார்கள்?” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில நாட்களிலேயே நாதஸ்வரம் தொடரின் கதாநாயகனும், கதாநாயகியும் கோடைக்கானல் மலையிலிருந்து விழுந்த்தாகக் காண்பித்தார்கள். இதை யார்தான் நம்புவார்கள்? எண்று அவர்களுக்கே தோன்றியிருக்க வேண்டும். முதலில் கதாநாயகன் உயிரோடு இருப்பது போல காண்பித்து ஒரு நாள் கழித்து கதாநாயகியும் காலில் அடிபட்டு பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.

அதேபோல “முந்தானை முடிச்சு’” கதாநாயகி தமிழரசியும் இறந்துபோய் அவளது உடலை மார்ச்சுவரிக்கே கொண்டுபோய்விட்டதாகக் காண்பித்தார்கள். கதாநாயகி இறந்ததாகக் காட்டுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்பதை இப்போது நன்கு உணர்ந்து தமிழரசி உயிர் பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.

இனி இது போன்ற காட்சிகளே தம் தொடர்களில் வராமல் டைரக்டர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோமா?.

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

நன்றி நன்றி நன்றி

இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்